இஸ்ரேல் ஆதரவு குழு மீதான கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளிலிருந்து பயணத்தைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
நேற்று, புதன்கிழமை தேசிய பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.
டிரம்பின் உத்தரவின்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் நுழைவதை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது.
தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குடியேறிகள் மீதான கடுமையான அடக்குமுறையை அறிவிக்கும் அதே வேளையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த கொலராடோ தாக்குதலை டிரம்ப் கண்டித்தார்.
12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தார் டிரம்ப்
