பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது.
திமுகவைச் சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் பாமகவின் தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் (ஜூலை 24) நிறைவு பெற்றது. இதில், வைகோக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காததன் மூலம் அவர் 30 ஆண்டு நாடாளுமன்ற வாழ்க்கைக்கு இன்று விடை கூறியுள்ளார்.
பதவிக்காலம் முடிவடையும் நாளில் மாநிலங்களவையில் உரையாற்றிய வைகோ, தனது வாழ்நாள் அனுபவங்களை பகிர்ந்தார். “என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிய திமுக முன்னாள் தலைவர் கலைஞர் மற்றும் முரசொலி மாறனுக்கு நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன்,” என உருக்கமான நன்றி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த வைகோ, மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.
இதே நேரத்தில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “வைகோ எங்களோடு (பாஜக கூட்டணி) வந்தால், அவரை மீண்டும் எம்.பியாக அனுப்ப முடியும்,” என்ற கூற்றை வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியல் வட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் அரசியல் பயணம் தொடருமா? அல்லது ஓய்வுக்கு செல்லும் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.