பெய்ஜிங்கில் நடைபெற்ற 2025ம் ஆண்டு சர்வதேச அடிப்படை அறிவியல் மாநாட்டில், முன்பு டூரிங் பரிசு பெற்ற ரோப்பர்ட் டார்ஜனுக்கு அடிப்படை அறிவியல் வாழ் நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. இவர், சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
இம்மாநாட்டின் மையம் குறித்து அவர் கூறுகையில், ஆய்வு வழிமுறைகளைப் பகிர்ந்து கொண்டு ஒரு தொடர்பு கூட்டம் அமைப்பது முக்கியமானது. அறிவியல் ஆய்வுகள், படிப்படியாக ஒன்றிணைப்பை நோக்கி வளர்ந்து வருகின்றன. நடப்பு மாநாடு, இப்போக்கைக் காட்டியுள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவின் மாபெரும் வளர்ச்சி குறித்து அவர் மேலும் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு மட்டுமல்ல, முழு அடிப்படை அறிவியல் துறைக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. அடிப்படை அறிவியல் துறையை வளர்ப்பதை, நீண்டகால நெடுநோக்கு திட்டமாக வைத்த சீனாவின் முடிவு, வியக்கத்தக்கது. எதிர்காலத்தில் சீனா மேலதிக சாதனைகளைப் பெற எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.