உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில், அணு ஆயுத வெடிப்புகளைக்கூட சமாளிக்கக்கூடிய, நகர்த்திச் செல்லக்கூடிய ஒரு மிகப்பெரிய செயற்கைத் தீவை உருவாக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த பிரம்மாண்டமான தீவு பாதியளவு நீரில் மூழ்கிய நிலையில் மிதக்கும்படியாக வடிவமைக்கப்படுகிறது.
சீனாவின் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றத்தின் உச்சமாகப் பார்க்கப்படும் இத்திட்டம், உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவையே ஓவர்டேக் செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது. இந்தத் தீவில் ஒரே நேரத்தில் 238 பேர் வசிக்க முடியும் என்றும், வெளி உலகத் தொடர்பு இல்லாமல், உணவு, நீர் போன்ற எந்தவொரு விநியோகமும் இல்லாவிட்டாலும் கூட நான்கு மாதங்கள் வரை தாங்கி நிற்கும் அளவிற்கு நவீன கட்டமைப்பு வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான புஜைன் விமானம் தாங்கிக் கப்பலை விடவும் இது பெரியதாக இருக்கும் எனவும், 6 முதல் 9 மீட்டர் உயரமுள்ள ராட்சத அலைகளையும் இது எளிதில் சமாளிக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
