ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20-ல் இருந்து 25 சதவீதம் வரை இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து வர்த்தக ஒப்பந்தம் தொடர் இழுபறியில் இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வேறு எந்த நாடுகளும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா வரி விதிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.