முக்கூடல் ஸ்ரீமன் நாராயணசாமி திருக்கோவில் ஆடித்திருவிழா கடந்த ஒன்றாம் தேதி | கொடியேற்றத்துடன் துவங்கியது
தொடர்ந்து பத்து நாட்கள் சுவாமி வீதி உலா மற்றும் வி எஸ் ஆதிமூலம் திடலில் வைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
சிவச்சந்திரனின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சிகள்
திரைப்பட நகைச்சுவை நடிகர்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன
பத்தாம் திருவிழாவாகிய நேற்று மாலை முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் பொய்க்கால் குதிரை மரக்கால் ஆட்டம்
மாடு ஆட்டம் மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் சப்பரபவனி நடைபெற்றது
இரவு பத்து மணிக்கு லட்சுமி நாராயணர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
நிகழ்ச்சியில் ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்
