இனி பெற்றோர்களை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10–15% கட்..!

Estimated read time 1 min read

தெலங்கானா முதல்வர் ஏ. ரெவந்த் ரெட்டி தலைமையில், அரசு ஊழியர்கள் (Government Employee) தங்கள் பெற்றோரை புறக்கணித்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்து 10-15 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு முன்னோடியான சட்டத்தை ( Welfare of Parents and Senior Citizens Act) முன்மொழிந்துள்ளது. இந்த பிடித்தம் செய்யப்படும் தொகை, புறக்கணிக்கப்பட்ட பெற்றோரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இச்சட்ட திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது

புதிய சட்ட முன்மொழிவின் விவரங்கள்:

– அரசு ஊழியர் தங்கள் பெற்றோரை புறக்கணிப்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களுடைய மாத சம்பளத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்படும்.

– குறைக்கப்பட்ட பணம் நேரடியாக புறக்கணிக்கப்பட்ட பெற்றோரின் வங்கி கணக்குக்கு செலுத்தப்படும்.

– இந்தச் சட்டம் குற்றப்பிரிவை நோக்காது. முதியோர் வாழ்க்கை நலனையும் மரியாதையையும் உறுதி செய்வதே நோக்கம்.

– புறக்கணிப்பு உறுதிப்படுத்தப்பட்ட பிறகு மட்டுமே சம்பளம் குறைக்கப்படும்.

– பொய் அல்லது தவறான புகார்களுக்கு எதிராக முறையான விசாரணை மற்றும் முறையீடு உரிமைகள் உண்டு.

– இந்த நடைமுறை, அரசு ஊழியர்களின் சம்பளத்தை சமூக பொறுப்புகளுக்கு பயன்படுத்தும் புதிய முன்மாதிரி என கருதப்படுகிறது.

புதிய சட்டம் குறித்து முதல்வர் ரெவந்த் ரெட்டி கூறியது:

இந்த புதிய சட்ட முன்மொழிவு குறித்து முதல்வர் ரெவந்த் ரெட்டி புதிய குழு-இரண்டாம் வகுப்பு அரசு ஊழியர்களுக்கு பாராட்டுப் பதக்கம் வழங்கும் விழாவில் பேசும் போது, “குழந்தைகள் பெற்றோர்களுக்கு கடமைப்பட்டுள்ள நெறிமுறை மற்றும் மனமாற்று பொறுப்பை வலியுறுத்தி, “உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தோரைக் மறக்க கூடாது; இது சட்டம் மட்டுமல்ல, நமது கடமை” என்று கூறினார்.

முதல்வரின் உத்தரவின்படி, தலைமைச் செயலாளரான ராமகிருஷ்ணா ராவ் ஒரு குழுவை தலைமை வகிக்கிறார். இந்த குழு சட்டத்தின் நடைமுறைகள், வரையறைகள் மற்றும் சவால்களை ஆராய்ந்து தீர்மானிக்கும்.

புதிய சட்டத்தின் நோக்கம் என்ன?

தெலங்கானாவின் அரசு ஊழியர்களின் பெற்றோர் புறக்கணிப்பை குறைக்க அரசு சம்பளத்தில் இருந்து நேரடி பணம் குறைக்கும் முன்மொழிவு, முதியோர் நலனில் புதிய பரிமாணத்தை உருவாக்குகிறது. இது சமூக பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் விதமாகும். ஆனால், சட்டத்தின் வெற்றிக்காக தெளிவான வரையறைகள், நியாயமான விசாரணை முறைகள், ஊழியர் பாதுகாப்பு மற்றும் மெடிடேசன் போன்ற ஆதரவு அமைப்புகள் அவசியம். இச்சட்ட திட்டம் இந்தியாவில் முதியோர் நலத்துறையில் முக்கிய முன்னேற்றமாகும் என்பதை வலியுறுத்துகிறது.

புதிய சட்ட முன்மொழிவு யாருக்கு பயனாக இருக்கும்:

– முதியோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழிகாட்டு குழுக்கள் என பெரும்பாலும் இந்த முன்மொழிவை பாராட்டியுள்ளனர்.

– நவீன குடும்ப அமைப்புகளில் முதியோர் புறக்கணிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடப்பட்டுள்ளது

– அரசு மூலம் மாதாந்திர வருவாயை உறுதி செய்வது முதியோர் புறக்கணிப்பை குறைக்கும் மற்றும் அவர்களுக்கு மரியாதை, பாதுகாப்பை மீண்டும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author