கவல் தொழில்நுட்பத்தின் செயற்கை நுண்ணறிவை பல முன்னணி நிறுவனங்கள் உபயோகப்படுத்த தொடங்கி இருப்பதால் மென்பொருள் துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வருகின்ற ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்குமோ என ஐடி துறையினர் அச்சத்தில் உள்ளனர்.
ஐடி துறை மட்டுமில்லாமல் பல துறைகளில் ஏஐ தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ஏஐ வருகையால் எந்த துறைகளில் எல்லாம் மேல் இழப்பு ஏற்படும் எவையெல்லாம் பாதிக்கப்படாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
அந்த ஆய்வில் செவிலியர், மக்களிடம் இருந்து ரத்தம் மாதிரிகள் எடுப்பது, தீயணைப்பு பணி, எலக்ட்ரீசியன் பணி, கப்பல் பொறியாளர்கள், டயர் பழுது பார்ப்பவர்கள் உள்ளிட்ட பணிகளை ஏஐ செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
சில வேலைகளில் கண்டிப்பாக மனிதர்கள் ஈடுபட வேண்டும். எக்காரணம் கொண்டு செயற்கை தொழில்நுட்பத்திடம் முழுவதுமாக வேலையை ஒப்படைத்து விட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.