ஆகஸ்ட் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்க விலை ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 14) 22 காரட் தங்கம் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.9,290க்கும், ஒரு சவரன் ரூ.74,320க்கும் விற்பனையானது. ஆனால் இன்று (ஆகஸ்ட் 15) விலை குறைவால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,280க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 18 காரட் தங்கமும் அதிரடியாக கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,620க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.60,960க்கும் விற்பனையாகிறது.
இதேசமயம் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ.127, கிலோவுக்கு ரூ.1,27,000 என நிலைத்துள்ளது.