2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம், தங்களுக்குச் சாதகமான பரப்புரைகளை மேற்கொள்ளத் தனியாகத் தொலைக்காட்சி சேனல் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய சேனலுக்கான உரிமம் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் காலதாமதத்தைத் தவிர்க்க, ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணிச் செய்தி சேனல் ஒன்றை விலைக்கு வாங்க விஜய் தரப்பு ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்தச் செய்தி நிறுவனம் எதிர்பார்க்கும் தொகை மிக அதிகமாக இருப்பதால், இந்த வணிகப் பேச்சுவார்த்தையில் தற்போது இழுபறி நீடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
