ஜுலை மாத சீனப் பொருளாதார செயல்பாட்டு நிலைமை

சீனத் தேசிய பொருளாதார செயல்பாட்டின் ஜுலை மாத நிலைமை குறித்த அறிக்கை ஆகஸ்ட் 15ஆம் நாள் வெளியிடப்பட்டது.

சீனப் பொருளாதாரத் துறையில் புதிதாக பெறபட்டுள்ள சாதனைகளில், நிதானம் மற்றும் முன்னேற்றம் ஆகிய இரு சொற்கள் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒருபுறமாக, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் பொருளாதாரச் செயல்பாடு நிலையாக உள்ளது. மறுபுறம், பொருளாதாரம் தொடர்பான பல குறியீடுகளில் துரிதப்படும் அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

மேலும், வெளிப்புற சூழலில் ஏற்பட்ட தீவிரமான மாற்றங்களை எதிர்கொண்டு, சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் நிலைமை குறிப்பிடத்தக்கது. முதல் 7 மாதங்களில், சரக்கு வர்த்தகங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு, கடந்த ஆண்டை விட 3.5விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.

மேலும், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் மற்றும் தொழில்துறையின் புத்தாக்கம் கூட்டாக மேம்பாட்டு வருகின்றன. தற்போது சீனாவுக்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு தொடர்பான காப்புரிமைகளின் எண்ணிக்கை உலகில் 60விழுக்காடு வகித்துள்ளது.

சீனாவின் வலுவான பொருளாதார செயல்திறனை அடிப்படையாக கொண்டு, சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில், 2025ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டை 4.8 விழுக்காட்டாக உயர்த்தியுள்ளது. உள்நாட்டு தேவை, ஏற்றுமதி மற்றும் புத்தாக்கம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி, இதற்கான காரணமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் அமெரிக்க வணிக பிரதிநிதிக் குழு சீனாவில் பயணம் மேற்கொண்டது, சீன சந்தை “இன்றியமையாதது” என்று வெளி உலகிற்கு சமிக்கை வெளியிட்டது.

அதே நேரத்தில், சீன சொத்துக்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் சமீபத்திய ஆண்டுகளில் உச்சத்தை எட்டியுள்ளது. டாய்ச் வங்கி மற்றும் ஸ்வீஸ்டானின் பிக்டெட் சொத்து மேலாண்மை உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள், சீன சொத்துக்களைக் கவர்ந்திழுக்க வேண்டும் பற்றிய கருத்துக்களை தெரிவித்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author