வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவதை பாஜக இலக்காகக் கொண்டிருப்பதால், அடுத்த 100 நாட்களில் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.
“அடுத்த 100 நாட்களில், நாம் அனைவரும் ஒவ்வொரு புதிய வாக்காளரையும், ஒவ்வொரு பயனாளியையும், ஒவ்வொரு சமூகத்தையும் அணுக வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும்,” என்று புது டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய மாநாட்டில் பிரதமர் கூறினார்.
“தேசிய ஜனநாயக கூட்டணியை 400க்கு கொண்டு செல்ல வேண்டும். பாஜக 370 இடங்களை தாண்ட வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.