ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் முக்கிய இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்புகள் முறையே ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உலக வர்த்தக உறவுகளுக்கு ஒரு முக்கியமான தருணத்தில் இந்தச் சந்திப்புகள் நடைபெற உள்ளன.
ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு, கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணம் என்பதால் மிகவும் குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன.
எஸ்சிஓ உச்சிமாநாட்டில் விளாடிமிர் புடின் மற்றும் ஜி ஜின்பிங்கை மோடி சந்திக்க உள்ளார்
