நகரங்களின் உயர் தர வளர்ச்சியை விரைவுபடுத்தும் வழிகாட்டுதல் ஆவணம் ஒன்றைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும் சீன அரசவையும் சமீபத்தில் கூட்டாக வெளியிட்டன.
புதிய யுகத்தில் ஷிச்சின்பிங்கின் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசச் சிந்தனை என்ற வழிகாட்டலின் அடிப்படையில், புத்தாக்கம் நிறைந்த, சொகுசும் அழகும் நாகரிகமும் அறிவுத் திறனும் கொண்ட நவீனமயமான நகரங்களை உருவாக்குவது என்ற நோக்கத்துடன், நகரங்களின் உயர் தர வளர்ச்சியை விரைவுபடுத்துவது என்ற தலைப்பில், நகரங்களின் கட்டமைப்பு மறுசீரமைப்பு, பசுமைமயமாக்கம், ஆட்சி முறை மேம்பாடு முதலியவற்றைப் பெரிதும் முன்னேற்றி, தனிச்சிறப்பு வாய்ந்த சீனாவின் நவீனமயமான நகரங்கள் எனும் புதிய வளர்ச்சிப் பாதையை உருவாக்க வேண்டும் என்று இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.