இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபூ, அமீரகம் ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய அணியின் 3 கேம் சேஞ்சர்கள் : சேவாக் கணிப்பு
இந்த ஆசிய கோப்பை தொடரானது இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்த பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக கலக்கப்போகும் மூன்று கேம் சேஞ்சர்கள் யார்? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக் சுவாரஸ்யமான சில விடயங்களை முன் வைத்துள்ளார். அந்த வகையில் வீரேந்தர் சேவாக் கூறியதாவது :
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா பேட்டிங்கில் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார். அதேபோன்று பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா வழக்கம் போல் சிறப்பாக செயல்பட்டு கேம் சேஞ்சராக திகழ்வார். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை மிஸ்ட்ரி ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்.
சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலக கோப்பையில் அற்புதமாக செயல்பட்ட அவர் இந்த முறையும் அவரது மாயாஜாலத்தை தொடர்வார் என சேவாக் கூறியிருந்தார். இந்த ஆசிய கோப்பை தொடருக்கான முதல் போட்டியில் இந்திய அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – அர்ஷ்தீப் சிங்
ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பை மற்றும் இந்தாண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த முக்கிய தொடர்களை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரையும் கைப்பற்றும் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இந்த 3 பேர் தான் கேம் சேஞ்சர்கள் – வீரேந்தர் சேவாக் கணிப்பு appeared first on Cric Tamil.