ஜப்பானுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகப் பொருளாதார அமைப்பில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வர இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படுவது முக்கியம் என்று வலியுறுத்தினார்.
தி யோமியோரி ஷிம்புன்னிற்கு அளித்த பேட்டியில், இரு அண்டை நாடுகளாகவும், உலகின் மிகப்பெரிய இரு நாடுகளாகவும் உள்ள இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலையான மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக அமைதி மற்றும் செழிப்பில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
“அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பானில் இருந்து நான் தியான்ஜின் நகருக்குப் பயணம் செய்ய உள்ளேன்.” என்று பிரதமர் மோடி கூறினார்.
உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா ஒத்துழைப்பு முக்கியம்: பிரதமர் மோடி
