ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிளஸ் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், சீனா முன்வைத்த உலக நிர்வாக முன்மொழிவுக்கு ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது பற்றி குட்ரேஸின் செய்தித் தொடர்பாளர் யாடிலீக் 4ஆம் நாள் கூறுகையில், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச கட்டமைப்பையும் சர்வதேசச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்குமுறையின் முக்கியத்துவத்தையும் குட்ரேஸ் தனது உரையில் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.