முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானிலை அற்புதம்!

Estimated read time 1 min read

டெல்லி : செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த அற்புதமான வானியல் நிகழ்வின் போது, பூமியின் நிழல் நிலவை முழுவதுமாக மறைப்பதால், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். இது ‘இரத்த நிலவு’ (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.

வானம் தெளிவாக இருந்தால், இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாக காண முடியும்.இந்த முழு சந்திர கிரகணம், நிலவு பூமியின் மைய நிழலில் (Umbra) முழுமையாக நுழையும் போது நிகழ்கிறது.

இந்த நிகழ்வு இரவு 10:28 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்கி, 11:01 மணிக்கு முழு கிரகணமாக மாறும். இரவு 12:23 மணிக்கு முழு கிரகணம் முடிந்து, 1:56 மணிக்கு பகுதி கிரகணமும் முடிவடையும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது, மேலும் இதற்கு தொலைநோக்கி அல்லது பைனாகுலர் தேவையில்லை.

இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் தெரியும். அடர் சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றுவது, பூமியின் வளிமண்டலத்தில் சிதறும் சூரிய ஒளியால் ஏற்படுகிறது. இந்தியாவில் வானிலை சாதகமாக இருந்தால், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இந்த அழகிய காட்சியை காணலாம்.வானியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

இந்திய வானியல் ஆய்வு மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. “இந்த கிரகணத்தை பார்ப்பது பாதுகாப்பானது மற்றும் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் ஒரு அனுபவமாக இருக்கும்,” என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வானம் மேகமூட்டமாக இல்லாவிட்டால், இந்த 82 நிமிட அற்புதத்தை அனைவரும் அனுபவிக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author