சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 13ஆம் நாள் சீனா-செலாக்கின் நான்காவது அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற கொலம்பிய மற்றும் ஹோண்டுராஸ் வெளியுறவு அமைச்சர்களுடன் சேர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது வாங்யீ கூறுகையில், சீனா-செலாக்கின் நான்காவது அமைச்சர்கள் கூட்டம் பெய்ஜிங் அறிக்கை மற்றும் 2025முதல் 2027ஆம் ஆண்டு வரையான கூட்டு செயல் திட்டத்தை நிறைவேற்றி இனிதே முடிந்தது. வரும் 3ஆண்டுகளில் 100க்கும் அதிகமான ஒத்துழைப்புத் திட்டங்களை இரு தரப்பும் எட்டியுள்ளன. மேலும், லத்தின் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஆதரவான 20 நடவடிக்கைகளைச் சீனா அறிவித்துள்ளது என்று வாங்யீ தெரிவித்தார்.