அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மற்றும் மேற்கு புறநகர் மாவட்ட அதிமுகவின் நகர, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அணியை சேர்ந்த 2,000 பேர் ஒருமித்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த திடீர் விலகல் அதிமுக உள்நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. ஏற்கனவே, செங்கோட்டையனுக்கு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நிலையில், பெரிய அளவிலான இந்த ராஜினாமா அதிமுகவின் நிலையை சிக்கலாக்கும் வகையில் அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.