அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அவரை பெங்களூருவில் புகழேந்தி நேரில் சந்தித்தார்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமியை (இபிஎஸ்) கட்சியில் இருந்து நாங்களே நீக்குவோம்” என்று அதிரடி சவால் விடுத்தார். இதன் மூலம், அதிமுக உள்நிலையில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, செங்கோட்டையனுக்கு ஆதரவாக சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் அவரை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, “நான் கூறியது போல அதிமுக ஒருங்கிணைப்பு பணி தொடரும்” என திட்டவட்டமாக செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனால், அதிமுகவின் எதிர்கால நிலை குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.