கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தனர். இதன் காரணமாக இருவருமே இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் தான் விளையாட இருக்கிறார்கள்.
இந்திய ஏ அணியில் விளையாடயிருக்கும் ரோஹித் மற்றும் கோலி :
அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கும் அவர்கள் அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து முற்றிலுமாக ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்குள் ரோகித் சர்மாவிற்கு 40 வயது ஆகிவிடும் என்பதனாலும் விராட் கோலி கிட்டத்தட்ட கரியரின் கடைசி கட்டத்தை எட்டி விடுவார் என்பதனாலும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர்கள் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டும் இன்றி அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் வேளையில் இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி குறைந்த அளவிலான ஒருநாள் போட்டிகளிலேயே விளையாட இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் தொடர்ந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும் அவர்கள் இனியும் அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் விளையாட வேண்டுமெனில் அதற்கு முன்னதாக இந்திய ஏ அணியுடன் இணைந்து விளையாட வேண்டும் என்ற கட்டளை இடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா ஏ அணியானது இங்கு நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : விராட் கோலி, சூரியகுமார் யாதவை கடந்து மாபெரும் சாதனை நிகழ்த்திய சிக்கந்தர் ராசா – விவரம் இதோ
எதிர்வரும் செப்டம்பர் 30, அக்டோபர் 3, அக்டோபர் 5 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கும் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணி சார்பாக ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர்கள் இருவரும் அந்த தொடரில் விளையாடினால் தான் அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தொடர்ந்து இந்திய அணியில் விளையாடனும்னா இதை செய்யுங்க.. ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு – பறந்த உத்தரவு appeared first on Cric Tamil.