ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர் சேக்கி எய் மீது பதிலடி தடை நடவடிக்கையை மேற்கொள்வதாக சீன வெளியுறவு அமைச்சகம் செப்டம்பர் 8ஆம் நாள் தெரிவித்தது.
தைவான், தியோயூ தீவு, வரலாறு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, ஜப்பானிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் சேக்கி எய் கடந்த பல ஆண்டுகளாக தவறான கருத்துக்களை வெளியிட்டு, யசுகுனி கல்லறையில் வெளிப்படையாக அஞ்சலி செலுத்தினார். இது, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நான்கு ஆவணங்கள் மற்றும் ஒரே சீனா என்ற கோட்பாட்டைக் கடுமையாக மீறி, சீனாவின் உள் விவகாரத்தில் தலையிட்டு, சீனாவின் அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 8ஆம் நாள் முதல், அவர் மீது சீனா பின்வரும் தடை நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, சீனாவில் அவரது சொத்துக்கள் முடக்கி வைக்கப்படும். இரண்டாவதாக, சீனாவிலுள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அவருடன் வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படும். மூன்றாவதாக, அவரும், அவரது குடும்பதினர்களும் சீனப் பெருநிலப்பகுதிக்கும், ஹாங்காங் மற்றும் மகௌவுக்கும் வருகை தருவதற்கு தடை விதிக்கப்படும்.