சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலை தொடர்கிறது.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 81,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 10150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 11072 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88576 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 140 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 140000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.