தொடர்புடைய தரவுகளின்படி, சீனாவின் இயற்கை மூலவளம் அதிகரித்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனத் தேசியளவில் விளை நிலப்பரப்பு சுமார் 12 இலட்சத்து 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஆகும்.
காடு வளர்ப்பு பரவல் விகிதம் 25.09 விழுக்காட்டாகும். இது, 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட 2 விழுக்காடு அதிகரித்துள்ளது. உலகளவில் காடு வளர்ப்பு பரவல் நிலப்பரப்பு வெகுவாக அதிகரிக்கும் நாடாக சீனா விளங்குகிறது. சிவப்பு காடு வளர்ப்பு நிலப்பரப்பு 310 சதுர கிலோமீட்டராகும். உலகில் சிவப்பு காடு வளர்ப்பு அதிகரிக்கும் சில நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது.
முதல் தொகுதியாக நிறுவப்பட்ட 5 தேசிய பூங்காகளில் சுமார் 30 விழுக்காட்டு தரை நாட்டின் முக்கிய பாதுகாப்புக்கான வன விலங்குகளும் தாவரங்களும் அடக்கம்.