பிரிட்டனில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் லண்டன் நகரின் மையத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது.
“யுனைட் தி கிங்டம்” என்ற பெயரில் நடந்த இந்தப் பேரணியில் சுமார் 1,10,000 ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, “படகுகளை நிறுத்துங்கள்” மற்றும் “அவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்” போன்ற குடியேற்ற எதிர்ப்பு முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
அதே நேரத்தில், “ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்” என்ற குழுவின் தலைமையில் சுமார் 5,000 பேர் பாசிசத்திற்கு எதிரான அணிவகுப்பு என்ற தலைப்பில் இதற்கு எதிராக எதிர்ப்புப் பேரணியை நடத்தினர்.
லண்டனில் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி
