நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சமூக ஊடக தளங்கள் மீது விதித்த தடை, பெரும் சீற்றத்தினை அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்ட பின்னரும், Gen Z தலைமையிலான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், துபாய்க்கு செல்வது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார் என ஊடக செய்திகள் கூறுகின்றன.
பிரதமருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தியா டுடே டிவியிடம் கூறுகையில், மருத்துவ சிகிச்சைக்காக துபாய்க்கு பயணம் செய்வதற்கான விருப்பத்தை ஒலி ஆராய்ந்து வருகிறார்.
தனியார் விமான நிறுவனமான ஹிமாலயா ஏர்லைன்ஸ், விமான நிலையத்தில் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் தொடர்ந்து அமைச்சரவையை விட்டு ராஜினாமா செய்து வருவதால், ஒலி ஏற்கனவே தனது துணை பிரதமருக்கு பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.
துபாய்க்குத் தப்பிச் செல்லத் திட்டமிடும் நேபாளப் பிரதமர் கே.பி.ஒலி
