உக்ரைன் தனது 34-வது சுதந்திர தினத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) கொண்டாடிய நிலையில், ரஷ்யாவுடனான போர் தீவிரமடைந்தது. ரஷ்யா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள், ஏவுகணை வீச்சுகள் ஆகியவை தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளன.
மேற்கு குர்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு அணுசக்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது உட்பட, உக்ரைன் ஒரு பெரிய டிரோன் தாக்குதல் அலையைத் தொடங்கியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனிய டிரோன்கள் குர்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்யா கூறியது.
சேதமடைந்த மின்மாற்றியால் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், கதிர்வீச்சு அளவு பாதுகாப்பான வரம்புகளுக்குள் இருப்பதாகவும் அணுமின் நிலையத்தின் செய்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு
