ஐ.நாவின் பலதரப்புவாதம் மற்றும் தூதாண்மையுறவின் மூலம் அமைதியை முன்னேற்றும் சர்வதேச தினத்தின் நினைவு நிகழ்ச்சி 21ஆம் நாள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐ.நாவுக்கான சீன நிரந்தர துணைப் பிரதிநிதி கேங்ஷுவாங் கூறுகையில், ஐ.நா சாசனத்தின் அதிகாரத்தை உறுதியாகப் பேணிக்காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சில நாடுகள் தங்கள் சொந்த நாட்டு முன்னுரிமை என்ற பெயரில், ஒருசார்புவாதத்தை வரம்புகளற்று செயல்படுத்தி, ஐ.நா மற்றும் பலதரப்பு அமைப்பு முறையை கடுமையாக மீறியுள்ளன. இது, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அமெரிக்கா சொந்த நலன்களை பிற நாடுகளின் நலன்களின் மேல் வைப்பதை சர்வதேச சமூகம் உறுதியாகப் புறக்கணித்து, பல்வேறு நாடுகளின் வளர்ச்சி உரிமையைக் கூட்டாகப் பேணிக்காத்து, பலதரப்புவாதத்தின் மீது பல்வேறு தரப்புகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.