தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 18) 21 மாவட்டங்களிலும், நாளை (செப்டம்பர் 19) 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (செப்டம்பர் 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகப்பட்டினம் ஆகியவை ஆகும்.
இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
