செப்டம்பர் 23ம் நாள் வரை, ஐ.நாவின் 193 உறுப்பு நாடுகளில் 152 நாடுகள், பாலஸ்தீன நாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன.
ஐ.நா பாதுகாப்பவையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் அமெரிக்கா மட்டும், பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்றுக்கொள்ள வில்லை. பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை குறித்து, அமெரிக்காவும் இஸ்ரேலும், தூதாண்மை தனிமையில் சிக்கிக் கொண்ட நிலைமையை இது வெளிக்காட்டுகிறது.
சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், உலகளாவிய இணையப் பயன்பாட்டாளர்களிடம் மேற்கொண்ட கருத்து கணிப்பின் முடிவில், இரு நாட்டுத் தீர்வை நடைமுறைப்படுத்துவது, பாலஸ்தீனப் பிரச்சினைக்கான ஒரே ஒரு வழிமுறையாகவும், மத்திய கிழக்கு அமைதியை நனவாக்குவதற்கு அடிப்படை வழிமுறையாகவும் உள்ளது என்று 78.2 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.