திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த தவறால், இன்று திமுக இணையத்தில் பேசுபொருளாகிவிட்டது.
தூத்துக்குடியில் இன்று பிரதமர் அடிக்கல் நாட்டிய புதிய இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தின் அறிமுக விழாவிற்கான விளம்பரத்தை, முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்துள்ளார், அனிதா ராதாகிருஷ்ணன்.
அந்த விளம்பரத்தில் ராக்கெட் புகைப்படம் இருந்தது. அந்த ராக்கெட்டின் முகப்பில் சீனாவின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. இதுவே தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விஷயத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பகிர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,”திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரம் இது.
திமுக சீனா மீது கொண்டிருக்கும் பற்றையும், நம் நாட்டின் இறையாண்மையை முற்றிலும் புறக்கணிப்பதையும் இது வெளிப்படுத்துகிறது.” என்று விமர்ச்சித்துள்ளார்.