நிறுவப்பட்ட விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய செயலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமையன்று (அக்டோபர் 9) மத்திய அமைச்சர்கள் மற்றும் செயலர்களுடனான உரையாடலின் போது, பிரதமர் மோடி சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகளின் அடிப்படை விதி 56 (ஜே) ஐ மேற்கோள் காட்டி, இதைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதன்படி, ஒருவர் அரசு பணியில் இருக்க தகுதியற்றவராக இருந்தால், அவரை பணியிலிருந்து விடுவிக்க மேலதிகாரிகளால் முடியும்.
இவ்வாறு கட்டாயமாக ஓய்வு பெறும் சந்தர்ப்பங்களில், மூன்று மாத அறிவிப்பு அல்லது அந்த காலத்திற்கு சமமான ஊதியம் மற்றும் படிகள் போன்ற இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.
செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
