2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக, பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான பைஜெயந்த் பாண்டா மற்றும் முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாக, இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வேலைத்திட்டங்கள், தொகுதி வரம்புகள், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
பாஜக-அதிமுக கூட்டணிக்குள் ஒருங்கிணைந்த தேர்தல் திட்டங்கள் விரைவில் அமலுக்கு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.