சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வரும் நிலையில் தீபாவளிக்கு மறுநாள் இன்று மிகவும் அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2080 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 97440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 13287 ரூபாய்க்கும், ஒரு சவரன் 106296 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 188 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 188000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
