சீனாவில் பரவும் புதிய கென்ஸ் கலாச்சாரம்… வைரலாகும் வீடியோ…!!! 

Estimated read time 1 min read

சீனாவில் இளம் தலைமுறையினர் திருமணத்தையும் குழந்தை பெறுதலையும் தவிர்க்கும் போக்கு அதிகரித்து வருவது அந்நாட்டு அரசை பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், சீன அரசு திருமணம் மற்றும் குழந்தை பெறுதலை ஊக்குவிக்க பல சலுகைகளை அறிவித்தாலும், புதிய சமூக மாற்றங்கள் அதற்கு எதிர்மாறான பாதையில் நகர்கின்றன.

சீனாவில், குறிப்பாக வசதிபடைத்த மற்றும் மேல் நடுத்தர வர்க்கப் பெண்கள் மத்தியில், “கென் கலாசாரம்” எனப்படும் புதிய பழக்கம் வேகமெடுத்து வருகிறது. இவர்கள் பாரம்பரிய உறவுகளையும், திருமண வாழ்க்கையையும் தவிர்த்து, தங்கள் தேவைகள் மற்றும் வாழ்க்கை நலன்களுக்காக “கென்ஸ்” எனப்படும் ஆண்களை வாடகைக்கு அமர்த்த தொடங்கியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள காணொளி ஒன்றில், “கென்” என்பது அழகான, உடல் தகுதி கொண்ட, மென்மையான குணம் உடைய இளைஞர் ஆண்களை குறிக்கிறது. இவர்கள் பெண்களின் வீட்டு வேலைகளைச் செய்வதோடு, ஷாப்பிங், சமையல், குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துவருதல் போன்ற பணிகளையும் மேற்கொள்கிறார்கள். அதேசமயம், ஒரு “உணர்ச்சி ஆதரவான துணை” போலவும் பெண்களுடன் நடந்து கொள்கிறார்கள்.

https://www.instagram.com/reel/DPwMun0EWNi/?igsh=aWp6Z3g1dHM5empl

இவர்கள் எந்தவித வாதத்திலும் ஈடுபடாமல், பெண்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் இணங்க நடந்து கொள்வதால், பலர் இவர்களை விரும்பி வேலைக்கு அமர்த்தி வருகிறார்கள். இந்தப் பழக்கம் உருவாக காரணம், பல வசதிபடைத்த பெண்கள் ஒரு துணையுடன் வாழ விரும்பினாலும், பாரம்பரிய திருமண உறவின் பொறுப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளில் சிக்கிக் கொள்ள விரும்பாததே என சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காணொளியில் 40 வயதான ஒரு பெண் தொழிலதிபர், தன் மனநிலைக்கு ஏற்ப பல “கென்ஸ்”‌களை மாற்றி மாற்றி வாடகைக்கு எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காணொளி தற்போது 4.4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author