நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (வயது 74) இன்று (அக்.23) அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
கொல்லிமலை பகுதியில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் தங்கியிருந்த அவர், இன்று அதிகாலை மாரடைப்பால் தவித்து உடனடியாக நாமக்கல் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மறைவு குறித்து திமுகவினர் மற்றும் தொகுதி மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்
