ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கிப் பல பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் வளாகத்தில் பக்தர்கள் உடல்கள் சிதறிக் கிடக்கும் கோரமான காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தில் பக்தர்கள் உயிரிழந்தது மனம் உடைக்கும் செயல் என்று சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்தார்.
ஆந்திராவில் கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் பலி
