சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், நவம்பர் 7, 8ஆம் நாட்களில் தெற்கு சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், சீர்திருத்தங்களை விரிவாக ஆழப்படுத்தவும், உயர்தர வளர்ச்சிக்கான திறப்புகளை உருவாக்கவும், குவாங்டோங்-ஹாங்காங்-மக்கெள கிரேட்டர் வளைகுடாப் பகுதியின் வளர்ச்சியை தொடர்ச்சியான முயற்சிகளுடன் முன்னேற்றவும் வேண்டும் என வலியுறுத்தினார்.
