ஏப்ரல் 2ஆம் நாள் தொடக்கம், சீன மக்கள் விடுதலைப் படையின் கிழக்குப் போர் மண்டலம் தைவான் நீரிணையின் தொடர்புடைய கடல் பரப்பில் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியது.
இந்த இராணுவப் பயிற்சி, லாய் சிங்டே அதிகார வட்டாரத்தின் வெறித்தனமான கூற்று மற்றும் செயலுக்கு எதிராக வழங்கப்பட்ட உறுதியான பதில் நடவடிக்கையாகும்.
தற்போது, தைவான் சுதந்திரச் சக்தியைத் தடுக்கும் வகையில், சீன மக்கள் விடுதலை படை மேலதிகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தேசிய இறையாண்மையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் சீனாவின் வலிமையான மன உறுதி மற்றும் பெரிய ஆற்றல் இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024ஆம் ஆண்டின் மே திங்கள் லாய் சிங்டே பதவியேற்றதிலிருந்து, தைவான் மற்றும் சீனப் பெருநிலப் பகுதி ஒன்றை ஒன்று சேராதது என்ற புதிய இரு நாட்டுக் கோட்பாட்டை அவர் இடைவிடாமல் வலியுறுத்தி வந்ததோடு சீனப் பெருநிலப்பகுதியை எல்லைக்கு அப்பால் பகைமை சக்தியாக வெளிப்படையாகப் பறைசாற்றி வந்தார். அவரின் இக்கருத்துக்களுக்கு வலிமையான பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சட்டப்பூர்வமான முறையில் தைவான் சுதந்திர சக்திகளுக்கு சீனப் பெருநிலப் பகுதி தண்டனை விதித்துள்ளது
தைவான் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். யாரும் எந்த சக்தியும் எந்தவொரு வடிவத்திலும் தைவானைச் சீனாவிலிருந்து பிரிப்பதைச் சீனா ஒருபோதும் அனுமதிக்காது என்னும் கருத்தும் இந்நடவடிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.