எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இருக்கும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை சந்தேகிக்கும் வகையிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உள்கட்டமைப்பு வலிமையை எடுத்துக்காட்டும் வகையிலும், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பேசிய சமீபத்திய கருத்துக்கள் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ப.சிதம்பரம், 2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தற்போது பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொண்டார்.
மேலும், இதை சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பாஜகவின் ஆதிக்கம் 2029க்கு பிறகும் தொடரும் என்று எச்சரித்தார்.
எனினும், குறைகளை சரிசெய்து, ஒன்றிணைப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், அதை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு
