தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது.
தூத்துக்குடி –கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு மாலை 4;30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெறும். குறிப்பாக திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வை காண குவிந்துள்ளனர். ஏனென்றால் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த இடமாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சூரசம்கார நிகழ்வு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
முதல் நாள் யாகசாலை பூஜையுடன் துவங்கிய இந்த விழா ஆறாம் நாள் சூரனை வதம் செய்யும் நிகழ்வாகவும் ,ஏழாம் நாள் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை காண வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். ஆறு முதல் ஏழு லட்சம் பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் கோவில் நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளது .
குறிப்பாக குழந்தைகள் கையில் டேக் கட்டி வருகின்றனர். குழந்தைகள் கூட்டத்தில் தொலைந்து விட்டால் அந்த டேக்கில் உள்ள உறவினர் நம்பர் மற்றும் பெயருக்கு அழைக்கும் வகையில் உள்ளது.சூரசம்ஹாரம் நிகழ்வு சரியாக 4;30 மணி அளவில் நடைபெற இருப்பதால் முருகப்பெருமான் திருச்செந்தூர் கடற்கரையில் ஜெயந்தி நாதராக எழுந்தருளிகிறார்.