சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மைக் கொள்கை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ தொடர்புடைய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி அமைதியைப் பேணிக்காக்கும் சக்தியைப் பலப்படுத்தும் உலகளாவிய தெற்கு எழுச்சியையும், பல்துருவ உலகத்தின் முன்னேற்றத்தையும் பிரிக்ஸ் விரிவாக்கம் வெளிகாட்டுகின்றது.
சுதந்திரம் மற்றும் தற்சார்ப்பு, உலகளாவிய தெற்கு தனிச்சிறப்பானது. ஒற்றுமை மற்றும் தன்னை வலிமைப்படுத்தல் இதன் பாரம்பரியமானது. சர்வதேச ஒழுங்கு முன்னேற்றத்தின் முக்கிய சக்தியாக உலகளாவிய தெற்கு மாறியுள்ளது.
உலகளாவிய தெற்கு உறுப்பினராக சீனா எப்போதுமே திகழ்க்கின்றது. சீனா அனைத்து தெற்கு உலகத்தைச் சேர்ந்த நாடுகளுடன் இணைந்து, தெற்கு உலகத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் என்றார்.