இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கானத் தங்கள் முதல் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்துள்ளார்.
இது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், விநியோக ஆதாரங்களைப் பல்வகைப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் பக்கத்தில் இதை வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நடவடிக்கை என்று வர்ணித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த காலத்திற்கு 2.2 மில்லியன் டன் எல்பிஜி இறக்குமதி செய்யப்பட உள்ளது.
அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய இந்தியா முதல்முறையாக ஒப்பந்தம்
