சொர்க்க பூமிக்கு வந்த உணர்வு ஏற்படுகிறது : ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பேச்சு!

சொர்க்க பூமிக்கு வந்த உணர்வு ஏற்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடி, ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில்  ரூ.6,400 கோடி  மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் புதிதாக நியமிக்கப்பட்ட 1,000 அரசு ஊழியர்களுக்கு பணி  நியமனக் கடிதங்களை வழங்கினார். பெண் சாதனையாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு திட்ட பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

விழாவில் பேசிய பிரதமர், சொர்க்க பூமிக்கு  வந்த உணர்வு வந்துள்ளதாகவும் அதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என தெரிவித்தார்.  ஸ்ரீநகர் “இந்திய சுற்றுலாத் துறையின் புதிய மையம்  என்றும் அவர் அழைத்தார்.

2014க்குப் பிறகு இங்கு வரும்போதெல்லாம், உங்கள் மனதைக் கவர இந்த முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்றும், உங்கள் மனதைக் கவர தொடர்ந்து முயற்சி செய்வேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும். பிப்ரவரி 20 ஆம் தேதி, பிரதமர் மோடி தனது பயணத்தின் போது ஜம்முவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார்.

பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் கட்சிக் கொடிகளை ஏந்தியபடி ‘பார் பார் மோடி சர்க்கார்’ என்று கோஷமிட்டனர். பிரதமர் மோடியை காண அதிகாலையிலேயே  ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author