2025ஆம் ஆண்டு உலக 500 முன்னணி யூனிகார்ன் பெயர் பட்டியல் 3ஆம் நாள் வெளியிடப்பட்டது. சீனாவின் 150 நிறுவனங்கள் இதில் சேர்க்கப்பட்டன.
தொடர்புடைய தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு உலகளாவில் 500 முன்னணி யூனிகார்ன் நிறுவனங்களின் மொத்த மதிப்பீட்டு மதிப்பு 39 இலட்சத்து 14 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்க மற்றும் சீனாவின் நிறுவனங்கள் இதில் பெருமளவு வகிக்கின்றன.
தற்போது, நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் முன்னேறிய தயாரிப்பு, வாகன தொழில் நுட்பம், போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, வாழ்க்கை சேவை, பண்பாட்டுச் சுற்றுலா மற்றும் ஊடகத் துறைகளில் சீனா உலக முன்னணியில் உள்ளது.
யூனிகார்ன் நிறுவனங்கள் என்பது, 10 ஆண்டுகாலமாக நிறுவப்படுவதோடு, 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிறுவனங்களாகும். தனிச்சிறப்பு மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தொழில் நுட்பத்தையும் தனிச்சிறப்பான வணிக வடிவத்தையும் கொண்ட நிறுவனங்களாகவும் இவை விளங்குகின்றன. இது, ஒரு நாடு அல்லது குறிப்பிட்ட பகுதியின் புத்தாக்க சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உயிர் ஆற்றலை மதிப்பிடும் முக்கிய குறியீடுகளில் ஒன்றாகும்.
