சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் ஸ்பெயின் தலைமையமைச்சர் பெட்ரோ சன்ட்ஷஸைச் Pedro Sanchezச் சந்தித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், அடுத்த ஆண்டு சீனாவும் ஸ்பெயினும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை உருவாக்கியதன் 20ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, சமமாக அணுகுவது என்பதில் ஊன்றி நின்று, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இரு தரப்பும் மொழி கல்வி, இளைஞர், பண்பாடு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளிலான பரிமாற்றத்தை வலுப்படுத்தி, மக்களிடையேயான நட்புறவை அதிகரிக்க வேண்டும். சீனாவும் ஸ்பெயினும், பொறுப்புணர்வு கொண்ட நாடுகளாகும். ஸ்பெயினுடன் இணைந்து ஐ.நா, ஜி 20 முதலிய சர்வதேச அமைப்புகளில் உள்ள தொடர்பை வலுப்படுத்தி, உலக அமைதி மற்றும் மனித குலத்தின் முன்னேற்ற இலட்சியத்துக்கு ஆற்றல் உட்புகுத்த சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோ சன்ட்ஷஸ் கூறுகையில், ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் கூட்டாளியுறவை இரு நாடுகள் ஆழமாக்கி வருகின்றன. மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றம், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், புதிய எரிசக்தி வாகனம் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஒத்துழைப்பை இரு தரப்பும் வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.