வார விடுமுறையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
நவம்பர் 16ஆம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டது முதல் நாள்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், வார விடுமுறையையொட்டி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு பணியாளர்கள், போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 3 மணி வரை 18ஆம் படியேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் கூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
