பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (டிசம்பர் 13) டெல்லி சென்றார். அவர் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழக அரசியல் நிலவரம், அ.தி.மு.க.வுடன் நடக்கவிருக்கும் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பான முக்கிய விவரங்களை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் எடுத்துரைக்க இருக்கிறார்.
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்குச் சாதகமாக இருக்கும் தொகுதிகள் எவை என்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் இருவரும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வரவிருக்கும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், அமித்ஷா – நயினார் நாகேந்திரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
