ஷீரடி சாய்பாபா அருளிய 11 உறுதிமொழிகள் : இன்றும் நிறைவேறும் அற்புதம்..!

Estimated read time 0 min read

சாய்பாபா தன் பக்தர்களுக்கு 11 உறுதி மொழிகள் கொடுத்திருக்கிறார். அப்படியே தங்கள் வாழ்வில் நடப்பதை எண்ணி மக்கள் மகிழ்கிறார்கள்.

அந்த 11 உறுதி மொழிகள் உங்களுக்காக:

1.சீரடிக்கு வந்து சீரடி மண்ணை மிதிப்பவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது .
2. என் சமாதியின் படி ஏறுபவனின் அனைத்து துக்கங்களையும் போக்கி விடுவேன்.
3. எனது உடல் இந்த உலகை விட்டு மறைந்தாலும் , துன்பம் என்று துயர்படும் பக்தன்  மனதால் நினைத்தால் ஓடி வந்து துன்பம் துடைப்பேன் .
4. திட பக்தி உறுதியான நம்பிக்கை பரிபூரண விசுவாசத்துடன் இருக்கும் பக்தனின் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.
5. நான் இறந்துவிட்டாலும் உயிருடன் இருக்கிறேன் என்பதை நீங்கள் உங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் மூலம் கண்டிப்பாக உணரமுடியும். இதை சத்தியமாக நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
6.நானே சரணம் என்று நம்பி முழுவதுமாக என்னை சரணடைந்த பக்தன் எவனும் வெறுங்கையோடு திரும்பியதில்லை. அப்படி யாராவது இருப்பின் அவரை எனக்கு அடையாளம் காட்டுங்கள்.
7.எப்படிப்பட்ட உள்ளத்தோடு, பக்தியோடு என்னை அணுகுகிறாரோ அப்படிப்பட்ட அனுபவத்தை நான் அவருக்குத் தருவேன்.
8.உங்களுடைய சுமைகளை நான் எப்போதும் சுமப்பேன். எனது வாக்கு எப்பொழுதும் எவ்விடத்தும், எந்நிலையிலும் பொய்க்காது .
9. நீங்கள் கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் நீங்கள் கேட்டவற்றைக். கொடுப்பதற்கு நான் காத்துக்  கொண்டிக்கிறேன்.  உங்கள் வேலை, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை என்னிடம் கேட்பது தான்.
10. நான் சொல்வதை முழுமனத்துடன் ஏற்றுக் கொள்ளபவருக்கு நான் என்றென்றைக்கும் கடன் பட்டுள்ளேன். 
11. என் திருவடிகளே கதி என்று சரணாகதி அடையும் பக்தன் பெரும் புண்ணியவான் ஆவான். பெரும் பாக்கியசாலி ஆவான். பிறவிப் பயனைப் பெற்றவன் ஆவான்.

Please follow and like us:

You May Also Like

More From Author